வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
மயிலாடுதுறையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் தலைமையில் நடந்தது.
மயிலாடுதுறையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் தலைமையில் நடந்தது.
ஆய்வுக்கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அரசு சிறப்பு செயலாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லலிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆலோசனை நடத்தினார்.
கலந்து கொண்டவர்கள்
. இதில் உதவி கலெக்டர்கள் யுரேகா (மயிலாடுதுறை), அர்ச்சனா (சீர்காழி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன், தேர்தல் தாசில்தார் ஜெனிட்டா மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.