நாகை சட்டமன்ற தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம்

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நாகை சட்டமன்ற தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது.

Update: 2022-09-20 18:40 GMT

வெளிப்பாளையம்:

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் நாகை சட்டமன்ற தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது.

நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், "உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்" திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அண்மையில் கடிதம் எழுதிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என சட்டமன்ற உறுப்பினர் கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.

ஆய்வு கூட்டம்

பட்டியலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, நாகை சட்டமன்ற தொகுதியில் முக்கிய கோரிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். நாகை தொகுதி எம்.எல்.ஏ முகமது ஷாநவாஸ் முன்னிலை வகித்தார்.இந்த ஆய்வு கூட்டத்தில் நாகையில் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும், அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும்.

தொழிற்பூங்கா அமைக்க வேண்டும்

நாகையில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க வேண்டும். ஈ.சி.ஆர். சாலையில் நவீன பஸ் நிலையம் அமைக்க வேண்டும். நாகை அரசு பொது ஆஸ்பத்திரி மற்றும் நாகூர் ஆண்டவர் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துவது, மறைமலை அடிகள் பெயரில் நவீன கலையரங்கம் கட்ட வேண்டும்.நாகையில் உள்ள நூலகங்கள் மற்றும் அரசுப் பள்ளி கட்டிடங்களை புதுப்பித்து கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட நாகை தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்