ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

Update: 2023-07-22 19:33 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளை தன்னிறைவு பெற்ற கிராமங்களாக உருவாக்கும் பொருட்டு பல்வேறு துறைகள் வாயிலாக செயல்படுத்தப்படும் பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் 5 ஆண்டுகளில் தேவையான அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு அனைத்து கிராம அண்ணா மறுலர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளில் 2021-22-ம் ஆண்டு 60 கிராம ஊராட்சிகளும், 22-23, 23-24, 24-25 மற்றும் 25-26-ம் ஆண்டுகளில் தலா 57 ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நிலுவையிலுள்ள பணிகளை விரைவாக முடித்து கிராமங்களை தன்னிறைவு பெற்ற கிராமமாக உருவாக்க அனைத்துத் துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்