குற்ற தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம்
டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் குற்ற தடுப்பு ஆய்வுகூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கினார். இதில் வேலூர் சரகம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், ரவுடிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், வரும் காலங்களில் குற்றம் நடைபெறாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன் (வேலூர்), கார்த்திகேயன் (திருவண்ணாமலை), ஆல்பர்ட்ஜான் (திருப்பத்தூர்), கிரண்ஸ்ருதி (ராணிப்பேட்டை) மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.