'திருச்சியில் மெட்ரோ ரெயில் அமைக்க ஆய்வு நடைபெறுகிறது' - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வரும் ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.;
திருச்சி,
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் பஞ்சப்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "பஞ்சப்பூரில் 10 ஏக்கரில் ஐ.டி. பார்க் வர உள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் ஜனவரி மாதம் உறுதியாக திறக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு வரும் வகையில் சென்னை கத்திப்பாரா மேம்பாலம் போன்று பாலம் அமைக்கப்பட உள்ளது. திருச்சியில் மெட்ரோ ரெயில் அமைக்க ஆய்வு நடைபெறுகிறது" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.