பாம்பன் ரெயில் பாலத்தி்ல் நாடாளுமன்ற நிலை குழு ஆய்வு
பாம்பன் ரெயில் பாலத்தி்ல் நாடாளுமன்ற நிலை குழு ஆய்வு செய்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ரெயில் நிலையம் மற்றும் பாம்பன் ரெயில் பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மதுரையிலிருந்து நேற்று கார் மூலமாக நாடாளுமன்ற ரெயில்வே நிலை குழு உறுப்பினர் ராதா மோகன்சிங் எம்.பி. தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர் பாம்பன் வந்தனர். அவர்கள் ரோடு பாலத்தில் நின்றபடி கடலுக்குள் அமைந்துள்ள 105 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரெயில் பாலத்தையும் மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள தூக்குபாலத்தையும் பார்வையிட்டனர். தொடர்ந்து அருகில் ரூ.430 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் தங்கினர். இன்று காலை கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தொடர்ந்து ராமேசுவரம் ரெயில்வே நிலையம் மற்றும் தனுஷ்கோடி சென்று அங்கு ரெயில் பாதை அமைய உள்ள இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இதனிடையே ராமேசுவரத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற நிலை குழு தலைவர் ராதா மோகன்சிங்கை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.