பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2022-09-17 18:45 GMT

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் போர்ட் காஜாமைதீன், மேலாண்மை இயக்குனர் நந்தகோபால் ஆகியோர் சிவகங்கை வந்தனர். இதையொட்டி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடன் பெற்றவர்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இதில், மண்டல இணைப்பதிவாளர் ஜீனு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன், பொது மேலாளர் பாலராஜா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலெட்சுமி கலந்து கொண்டனர்.

பின்னர் போர்ட் காஜாமைதீன் கூறியதாவது:- சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலமாக 2021-2022-ம் ஆண்டிற்கு தொழில் மேம்பாட்டு கடனாக 56 பயனாளிகளுக்கு ரூ.28 கோடியே 66 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்