முதல்-அமைச்சரை தரக்குறைவாக விமர்சித்த ஸ்டுடியோ உரிமையாளர் கைது

சமூக வலைதளத்தில் முதல்-அமைச்சரை தரக்குறைவாக விமர்சித்த ஸ்டுடியோ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-12 10:13 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி(வயது58). திமுகவைச் சேர்ந்த இவர், முன்னாள் நகர சபை உறுப்பினர் ஆவார்.

இந்த நிலையில் மயிலாடுதுறை ஆனதாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளர் விஜயராமன்(57)

என்பவர் சமூக வலைதளமான டுவிட்டரில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிலரை தரக்குறைவாக விமர்சித்து பதிவிட்டுள்ளதாக தி.மு.க. வை சேர்ந்த மாசிலாமணி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது விஜயராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சிலரை தரக்குறைவாக பதிவிட்டு இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஸ்டுடியோ உரிமையாளர் விஜயராமன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்