மாணவர்கள்விழிப்புணர்வு பேரணி

உடன்குடி பகுதியில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Update: 2023-01-29 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி அருகிலுள்ள தருமபுரி, சங்கரலிங்கபுரம், பூலோகபாண்டிவிளை, கீழராமசாமியாபுரம், ஆரோக்கியபுரம், பகுதியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி சென்றனர். பேரணியில் ஆசிரியர்கள் செல்வகுமார், அல்பர்ட் இருதயராஜ, பூங்கொடி, அழகுமணி, ரோஸ்லின்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர் சாந்தி செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்