பள்ளியில் வகுப்பு நேரத்தில் வேலை பார்த்த மாணவர்கள்
பள்ளியில் வகுப்பு நேரத்தில் மாணவர்கள் வேலை பார்த்த வீடியோ வைரலானது.
பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் நிறுத்துவதற்கு வசதியாக வளாகத்தில் புதிதாக சைக்கிள் நிறுத்தம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் சைக்கிள் நிறுத்தத்தின் அடிமட்டம் காய்ந்து விடாமல் இருக்க, அதன் மீது நேற்று 6-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்கள் வேலை பார்த்த வீடியோ காட்சி அந்த பகுதியில் பரவி வைரலாகியது. இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் சிதம்பரம் கூறுகையில், நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டேன். கட்டாயப்படுத்தி மாணவர்களை வேலை பார்க்க வைக்கவில்லை. இந்த சம்பவம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் விசாரணையில் உள்ளது, என்றார்.