ஆபத்தை உணராமல் படியில் பயணம் செய்யும் மாணவர்கள்

ஆபத்தை உணராமல் குறுகலான ரோடுகளில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் படியில் பயணம் செய்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-02-23 21:21 GMT


திருமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நகருக்குள் பள்ளிகளில் படிக்க வரும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு வருபவர்களும் டவுண் பஸ்களையே நம்பியுள்ளனர். ஆனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், குறுகலான ரோடுகளில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சம்பவம் நடக்கும் முன்னர் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்