நாசரேத்தில் வியாழக்கிழமை நடக்கும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ, மாணவியருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

நாசரேத்தில் வியாழக்கிழமை நடக்கும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ, மாணவியருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

Update: 2023-10-18 18:45 GMT

நாசரேத்தில் இன்று(வியாழக்கிழமை) நடக்கும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவ, மாணவியருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

தமிழ் கனவு நிகழ்ச்சி

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி கல்லூரி அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் 3-வது கட்டமாக தமிழ் கனவு என்னும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி ஏரல் தாலுகா நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

மாணவ-மாணவியருக்கு விருது

நிகழ்ச்சியில் புத்தகக் கண்காட்சி, நான் முதல்வன் திட்டம், அகழாய்வு களங்கள், உயர்கல்வி வழிகாட்டுதல், தாட்கோ திட்டங்கள், வங்கிகடன், தொழில் முனைவோர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்டதொழில் மையம், தேர்தல் விழிப்புணர்வு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில், அவர்களுக்கு பெருமிதச்செல்வன் மற்றும் பெருமிதச்செல்வி ஆகிய இரண்டு வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. சொற்பொழிவுக்கு பின்னர் கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வி நாயகன் மற்றும் கேள்வி நாயகி ஆகிய இரண்டு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்களது திறனையும், சிந்தனையையும் வெளிப்படுத்துவதோடு கேள்விகளையும் எழுப்பி விருதுகளை பெற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்