தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என்று கலெக்டர் அறிவுரை வழங்கினாா்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள். இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ- மாணவிகள், மனம் தளராமல் அடுத்து நடைபெறவுள்ள உடனடி தேர்வில் தேர்வு எழுதி வெற்றி பெற்று நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை பெறலாம். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருந்து தோல்வியடைந்த பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு தன்னம்பிக்கை தரும் வகையில் உரிய வழிகாட்டுதலை வழங்குவதோடு, அன்புகாட்டி பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.