ஆபத்தான முறையில் அரசு பள்ளி மாடியை சுத்தப்படுத்திய மாணவர்கள்

செம்பட்டி அருகே ஆபத்தான முறையில் அரசு பள்ளி மாடியை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

Update: 2022-06-15 17:00 GMT

செம்பட்டி அருகே பச்சமலையான்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பச்சமலையான்கோட்டை, கேத்தையகவுண்டன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி திறக்கப்பட்ட நிலையில், அந்த பள்ளி சுத்தம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

குறிப்பாக பள்ளியின் மாடியில் இலைகள் தேங்கி, மழைநீர் வெளியேறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாடியை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மதிய உணவு இடைவேளையின்போது, மாடியில் ஏறி அங்கு தேங்கி கிடந்த இலைகளை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

அப்போது சில மாணவர்கள், ஆபத்தான முறையில் மாடியில் அங்கும் இங்குமாக தாவியபடி இருந்தனர். மேலும் சிலர், கைப்பிடி சுவரில் ஏறி விளையாடினர். இந்த காட்சியை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்