கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் பவானிசாகர் பகுதியில் தங்கியிருந்து கிராமப்புற விவசாய பணி அனுபவ பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்கள் பவானிசாகர் அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் தங்கவேல்சாமி என்ற விவசாயியின் நிலத்தில் மக்காச்சோள விதைகளை ஊன்றினார்கள். அப்போது குடியரசு தினத்தை முன்னிட்டு, ''நாளைய இந்தியா விவசாயிகளின் கையில்'' என்ற விழிப்புணர்வை விவசாயிகளிடம் மாணவிகள் ஏற்படுத்தினார்கள்.