பள்ளி சுவர் துளையால் கேள்வி குறியாகும் மாணவர்கள் எதிர்காலம் தவறான பாதைக்கு செல்லும் முன் தடுத்து நிறுத்த கோரிக்கை

பள்ளி சுவரில் உள்ள துளையால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி இருக்கிறது. அவர்கள் தவறான பாதைக்கு செல்லும் முன் தடுத்து நிறுத்திட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-13 19:13 GMT

புதுப்பேட்டை, 

பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். பள்ளியை சுற்றிலும் மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுவரில் சமூக விரோதிகள் துளையிட்டு, பள்ளி விடுமுறை தினங்களில் உள்ளே புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேநேரத்தில் பள்ளிக்கூடம் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் சில மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெரியாமல் வகுப்பை விட்டு வெளியே சுற்றுவதற்கு இந்த துளையை பயன்படுத்தி வருகிறார்கள்.

கல்வி பாதிப்பு

நுழைவு வாயில் வழியாக சென்றால், ஆசிரியர்களிடம் அகப்பட்டுக் கொள்வோம் என்பதால், மாணவர்களுக்கு இந்த துளை சவுகரியமாக போய்விடுகிறது.

இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பிய நேரத்துக்கு பள்ளியில் இருந்து வெளியேறி, ஹாயாக ஊர் சுற்றி வருகிறார்கள். இதனால் அவர்களது கல்வி பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

தவறான பாதை

அதே நேரத்தில் தற்போதைய சூழலில், போதை பொருட்கள் விற்பனை கும்பல் என்பது இதுபோன்ற இளம் தலைமுறையை நோக்கியே நகர்ந்து, அவர்களது எதிர்காலத்தை பாழாக்கி வருகிறது.

அதேபோன்ற சிலர் இந்த மாணவர்களை தவறான பழக்கத்துக்கு அழைத்து செல்வதற்கு வாய்ப்பாக இது அமைந்துவிடும் என்பது தான் அச்சத்துக்கு உரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்