சாதி வருமான சான்றிதழ் பெற முடியாமல் மாணவ மாணவிகள் அவதி

சின்னசேலம் தாலுகாவில் சாதி வருமான சான்றிதழ் பெற முடியாமல் மாணவ மாணவிகள் அவதி

Update: 2022-06-24 17:26 GMT

கச்சிராயப்பாளையம்

சின்னசேலம் தாலுகாவில் வடக்கனந்தல், சின்னசேலம், நைனார்பாளையம் உள்ளிட்ட குறு வட்டங்கள் உள்ளன. தற்போது அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மேற்படிப்பு படிப்பதற்காக மேற்கண்ட குறுவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சாதி மற்றும் வருமானம் உள்ளிட்ட சான்றிதழ் கேட்டு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் விண்ணப்பித்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது, அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சிபெற்ற நாங்கள் கல்வி சான்றிதழ்களை எளிதாக பெற்று விட்டோம். அடுத்து மேற்படிப்பு படிப்பதற்கு சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் தேவைப்படுவதால் அவற்றை பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்தோம். சில நாட்களிலேயே சான்றிதழ்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் விண்ணப்பித்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் சான்றிதழ்கள் கிடைக்காததால் எங்களின் மேற்படிப்பு கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட தாசில்தார் மற்றும் அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டால் அவர்கள் சரியான பதில் கூறவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி எங்களின் படிப்பை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சான்றிதழ்களை விரைந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்