அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவர்கள் அவதி

செய்யாறு அருகே அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.

Update: 2023-09-21 16:58 GMT

செய்யாறு

செய்யாறு அருகே அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.

பலத்த மழை

செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாவில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. செய்யாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் குடியிருப்பு மற்றும் அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

மோரணம் அரசு ஆரம்பப்பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை 83 மாணவ-மாணவிகளும், 3 ஆசிரியர்கள் பணியாற்றிய வருகின்றனர். மோரணம் கிராமத்தில் பெய்த கனமழையால் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியது.

மாணவர்கள் அவதி

மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.

அதனை கண்ட கிராம மக்கள் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை வடிக்கும் பணியில் ஈடுபட்டு தற்காலிகமாக மழை நீரை அப்புறப்படுத்தினர்.

இனிவரும் காலங்கள் மழைகாலம் என்பதால் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் அமைத்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மழைநீருடன் கழிவுநீர்

இதேபோல செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் கீழ் புதுப்பாக்கம் விரிவுபகுதி பசும்பொன் நகரில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்கி இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

மேலும் நோய் தொற்றும் அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்