களிமண்ணில் கடல் ஆமைகள் சிற்பம் செய்த மாணவர்கள்

களிமண்ணில் கடல் ஆமைகள் சிற்பம் செய்த மாணவர்கள்;

Update: 2022-06-29 15:31 GMT

வெளிப்பாளையம்:

நாகை ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆசிரியர் பாலசண்முகம் வழிகாட்டுதலின்படி களிமண்ணில் சிற்பமாக கடல் ஆமைகளை செய்து பள்ளியில் நேற்று காட்சிப்படுத்தினர். பொருட்செலவு இல்லாமல் தங்களுக்கு எளிதாக கிடைக்கும் களிமண் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி, தாங்கள் பாடம் மூலம் கற்றுக்கொண்டதை உருவமாக மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். ஒரத்தூர் பள்ளி மாணவ, மாணவிகள், தாங்கள் கற்று கொண்டதை ஆமை உருவத்தில் களிமண்ணால் செய்ததுடன், கடல் ஆமைகளின் உடல் உறுப்புகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தனர். இதனை ஆசிரியர்கள் மற்றும் பலர் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்