மீனாட்சி அம்மன் கோவிலில் 108 திருவெம்பாவை பாசுரங்கள் பாடிய மாணவர்கள்
மீனாட்சி அம்மன் கோவிலில் 108 திருவெம்பாவை பாசுரங்களை மாணவர்கள் பாடினர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதிலும் சிவபெருமானே இங்கு பல்வேறு திருவிளையாடல் நடத்தி பல அற்புதங்களை நிகழ்த்திய திருத்தலம். எனவே மீனாட்சி அம்மன் கோவிலை பூலோக கயிலாயம் என்பர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிகளை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடல் பாடி புகழின் உச்சிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலின் புகழை மேலும் சிறப்பு செய்ய தமிழ்நாடு இசைக்கல்லூரியின் மாணவர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுடன் இணைந்து நாதம் 108 திருவெம்பாவை பாசுரங்களை பாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி நேற்று மாலை கோவிலில் பொற்றாமரை குளத்தின் கரையில் அமர்ந்து மாணவர்கள் இறைவனை வேண்டி திருமுறை பாடல்களை பாடினார்கள். அதனை காண பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.