பட்டமளிப்பு விழா நடத்தக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பட்டமளிப்பு விழா நடத்தக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
நன்னிலம் அரசு பாரதிதாசன் உறுப்பு அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை என கூறியும், பட்டமளிப்பு விழா நடத்தக்கோரியும் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து
கல்லூரி வாசலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.