இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில், அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில், இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தி மொழியை நாடு முழுவதும் அலுவல் மொழியாகக் கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், அனைத்து துறைகளிலும் மத்திய அரசு இந்தி திணிப்பு செய்வதை எதிர்த்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் கல்லூரி கிளை செயலாளர் புரட்சி மணி, கிளை தலைவர் பாலமணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.