ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அங்கன்வாடியாக மாற்றக்கோரி மாணவர்கள் கலெக்டரிடம் மனு

ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அங்கன்வாடியாக மாற்றக்கோரி மாணவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-05-30 17:38 GMT

தாமரைக்குளம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 320 மனுக்கள் பெறப்பட்டன. இதில் கடந்த ஆட்சியில் அரியலூர் அருகே உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நுழைவு வாயிலில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திற்கு, ஊர் பொதுமக்களும், முன்னாள் மாணவர் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று பள்ளியில் பயிலும் மாணவர்களும், பெற்றோர்களும் அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், பள்ளி வளாகத்தில் பள்ளியின் நுழைவுவாயிலில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் நாங்கள் கல்வி பயில்வதற்கு இடையூறாக இருக்கிறது. மேலும் மேற்கண்ட கட்டிடத்தால் நாங்கள் விளையாடுவதற்கான இடம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவ்விடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட அனுமதிக்கக்கூடாது. எங்களது ஊரில் அங்கன்வாடி மையம் இதுவரை இல்லை. எனவே அந்த கட்டிடத்தை கல்வி சார்ந்த அங்கன்வாடி மையமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்