கலெக்டரிடம் மாணவர்கள் புகார்

தென்காசி கலெக்டரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.

Update: 2022-09-26 18:45 GMT

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, சங்கரன்கோவில் அருகே உள்ள வடநத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் மனு கொடுக்க வந்தனர்.

அப்போது மனுவை மாவட்ட கலெக்டரே நேரில் விசாரிக்க வேண்டும் என்றும் கூறி மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளிடம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேரில் பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது, பள்ளியில் சத்துணவு தரமற்ற நிலையில் இருக்கிறது. பருப்பில் வண்டு கிடக்கிறது. வீட்டில் இருந்து நாங்கள் உணவு கொண்டு வந்தால் எங்களுக்கு சீருடை கிடையாது என்று சொல்கிறார்கள். இதனால் நாங்கள் எப்படி படிக்க முடியும்? என்றனர்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆகாஷ் கூறியதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்