கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்: போக்குவரத்து பணிமனையில் அதிர்ச்சி சம்பவம்..!
கள்ளக்குறிச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில், மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் மாணவர்களுக்கு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், போக்குவரத்து பணிமனையில் பயிற்சிக்காக பணி அமர்த்தப்பட்டுள்ள ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்காமல் அங்குள்ள கழிவறைகளை சுத்தம் செய்து, பெயிண்ட் அடிக்க வேண்டும் என, அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
விடியோ வெளியான நிலையில், மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.