பெண்ணாடத்தில் பட்டாசு வெடித்து மாணவர்கள் கொண்டாட்டம்

கோடை விடுமுறை அறிவிப்பு: பெண்ணாடத்தில் பட்டாசு வெடித்து மாணவர்கள் கொண்டாட்டம்;

Update: 2023-04-28 18:45 GMT

பெண்ணாடம்

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நேற்று கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாலையில் பள்ளி வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவர்கள் மகிழச்சி ஆரவாரம் செய்தனர். பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்ததும் பழைய பஸ் நிலையத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ண சாயத்தை பூசினர். பின்னர் பட்டாசு வெடித்த அவர்கள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்