மாணவர்கள் உதவித்தொகை பெற இணையதளம் வழியாக புதுப்பிக்கலாம்

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற இணையதளம் வழியாக புதுப்பிக்கலாம்.

Update: 2023-10-10 18:45 GMT

கல்வி உதவித்தொகை

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின வகுப்பை சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின வகுப்பை சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இணையதள முகவரி

நடப்பாண்டில் புதுப்பித்தலுக்கு மாணவர்கள் https//ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும். இதில் ஏதாவது இடா்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும்.

கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு வருகிற 18-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம்(நவம்பர்)18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் இதுபற்றிய விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தையோ அணுகி பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்