துணைத்தேர்வுக்கு மாணவர்கள் வரும் 27-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Update: 2022-06-22 15:58 GMT

சென்னை,

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பள்ளிகளில் பதிவு செய்து பொதுதேர்வெழுதிய மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (03.07.2022 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். .

தனித்தேர்வர்கள் 27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (03.07.2022 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான் பின் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நடைபெறும். 11-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும். 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெறும்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூபாய் 175, தேர்வில் தோல்வியுற்ற தனித்தேர்வர்கள் ஒவ்வொரு படத்திற்கும் 50 ரூபாய் கட்டணமும், இதர கட்டமாக ரூ.35ம், ஆன்லைன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். முதல் முறையாக பிளஸ்-2 தேர்வெழுதும் தனித்தேர்வர்கள் 185 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்