சுரண்டை அரசு கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சுரண்டை அரசு கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சுரண்டை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதற்காக சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மாணவர் சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். கலை அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் 19-ந்தேதி வரை இந்த மையத்தை அணுகி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.50. எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.2 மட்டும் ெசலுத்தினால் போதும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மாணவிகள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை தெரிவித்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9486716862, 9698781433, 8012612961 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு உதவி மையமும் செயல்பட்டு வருவதால் பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் 7708923707 என்ற செல்போன் எண்ணில் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை சுரண்டை அரசு கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தெரிவித்துள்ளார்.