விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கான நல்ல பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழகத்தில் திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக திகழ 7, 8, 9-ம் வகுப்புகள் மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெறுவதற்கு 6, 7, 8-ம் வகுப்புகளில் சேர்க்கையும், மாணவ-மாணவிகளுக்கு அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. மாணவர்களுக்கான போட்டிகளாக தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஆக்கி, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபடி, மேஜைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல். மாணவிகளுக்கான போட்டிகளாக தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஆக்கி, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபடி, டென்னிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல், மேஜைப்பந்து.
மாவட்ட, மாநில மற்றும் தேசியஅளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் 2023-24-ம் ஆண்டு விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர்வதற்கான படிவங்களை www.sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி (தொலைபேசி எண் 0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.