நன்னிலம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து நன்னிலம் அரசு கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-17 19:00 GMT

தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து நன்னிலம் அரசு கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதை கண்டித்தும், தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி வளாகம் முன்பு வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த செமஸ்டர் தேர்வில் இளங்கலையில் தேர்வு கட்டணம் ரூ.75 என இருந்ததை ரூ.120 ஆகவும், முதுகலையில் ரூ.150 ஆக இருந்த கட்டணத்தை ரூ.200 ஆக உயர்த்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பழைய கட்டணம்...

இதேபோல் செய்முறை தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பழைய தேர்வு கட்டணத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்