தேர்வு கட்டணத்தை குறைக்கக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தேர்வு கட்டணத்தை குறைக்கக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தண்டலச்சேரியில் உள்ள அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் தேர்வு கட்டணத்தை குறைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.