டேக்வாண்டோ போட்டியில் மாணவர்கள் சாதனை

தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2022-07-03 19:55 GMT

தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூருவில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பூம்சே மற்றும் க்யூரூகி ஆகிய 2 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மதுரையை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு 25 தங்கப்பதக்கம், 12 வெள்ளி பதக்கம் மற்றும் 9 வெண்கல பதக்கம் வென்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் 3-ம் இடம் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை தேசிய போட்டி ஒருங்கிணைப்பாளர் ரவி, மதுரை மாவட்ட டேக்வாண்டோ சங்க தலைவர் நாராயணன், துணைத்தலைவர் கார்த்திக், செயலாளர் பிரகாஷ் குமார் மற்றும் பயிற்சியாளர்கள் ரகுராமன், பாலமுருகன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்