தேசிய திறனாய்வு தேர்வில் ஒரே பள்ளியை சேர்ந்த 15 மாணவர்கள் வெற்றி
தேசிய திறனாய்வு தேர்வில் ஒரே பள்ளியை சேர்ந்த 15 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தொண்டியகாடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி பயிலும் மாணவர்கள் சமீபத்தில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்றனர். இதில் அந்த பள்ளியை சேர்ந்த 10 மாணவிகள், 5 மாணவர்கள் என 15 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் மாணவிகள் மீனா, அபிகா ஆகிய 2 பேர் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றனர். தேசிய திறனாய்வு தேர்வில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியர் மனோகரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் கூறுகையில், திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரு,1,000 வீதம் வழங்கப்படும். இந்தநிலையில் எங்கள் பள்ளியில் இருந்து 15 மாணவர்கள் எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்' என்றார்.