ராயக்கோட்டை அருகே இடைநின்ற 6 மலைவாழ் மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

Update: 2022-09-23 18:45 GMT

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே உள்ள ஆர்.குட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து, தற்போது ராயக்கோட்டை பகுதிக்கு 6 மலைவாழ் மாணவர்கள் இடம் பெயர்ந்தனர். இதனால் அவர்கள் 6 பேரும் பள்ளிக்கு செல்லாமல் இடை நின்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கெலமங்கலம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ண தேஜஸ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சேட்டு, ஆசிரியர் பயிற்றுனர் வேடியப்பன், ராயக்கோட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சையத் ஜலால் அகமத், ஆர்.குட்டூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை சித்ரகலா மற்றும் ஆசிரியர்கள் மாதேஷ், சாரதா ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து 6 மாணவர்களையும் ராயக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்தனர். இதனால் 6 மலைவாழ் மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்