கருணாநிதி நூற்றாண்டு விழா:90,452 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல்

Update: 2023-08-14 19:00 GMT

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி சர்க்கரை பொங்கல் வழங்க அரசு உத்தரவிட்டது. கருணாநிதி பிறந்தநாளான, கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி கோடை விடுமுறை என்பதால், ஆகஸ்டு 14-ந் தேதி சர்க்கரை பொங்கல் வழங்க உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி மாநிலம் முழுவதும் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், சத்துணவு உட்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், 94 மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. அதேபோல் மாவட்டம் முழுவதும் 984 சத்துணவு மையங்களில் 90 ஆயிரத்து 452 மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டதாக பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்