குத்துச்சண்டை போட்டியில் மாணவருக்கு தங்கப்பதக்கம்
குத்துச்சண்டை போட்டியில் மாணவருக்கு தங்கப்பதக்கம்
விருதுநகர் அல்லம்பட்டி சவுடாம்பிகை மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவன் ஜெகதீசன். சிவகங்கை மாவட்டம் சாம்பவிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தங்கம் வென்ற மாணவன் ஜெகதீசனை பள்ளி நிர்வாகிகள் மற்றும் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாராட்டினர்.