விஷம் தின்று பிளஸ்-2 மாணவி தற்கொலை

விஷம் தின்று பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-10 16:35 GMT

வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி வடக்கு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகள் சரிதா (வயது17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் வாசுகியுடன் சரிதா வசித்து வந்தார். சம்பவத்தன்று சரிதா செல்போன் பார்த்து கொண்டு வீட்டு வேலை செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய தாய் திட்டியதால் மனவேதனை அடைந்த சரிதா குருணை மருந்தை (விஷம்) தின்றார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கன்னிகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்