தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.27 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி 10-ம் வகுப்பில் 90.26 சதவீதம் பேர் தேர்ச்சி

தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.27 சதவீத மாணவ, மாணவிகளும், 10-ம் வகுப்பு தேர்வில் 90.26 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2022-06-20 17:11 GMT

தென்காசி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.27 சதவீத மாணவ, மாணவிகளும், 10-ம் வகுப்பு தேர்வில் 90.26 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு

தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன.

நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த பிளஸ்-2 தேர்வை தென்காசி மாவட்டத்தில் 7,933 மாணவர்கள் எழுதி இருந்தனர். அதில் 7,347 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 8,772 மாணவிகளில் 8,569 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தம் 15,916 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.27 சதவீத தேர்ச்சி ஆகும்.

10-ம் வகுப்பு

இதேபோல் 10-ம் வகுப்பில் 9,638 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 8,185 பேரும், 9,718 மாணவிகள் தேர்வு எழுதியதில் 9,285 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90.26 சதவீத தேர்ச்சி ஆகும்.

இந்தநிலையில் நேற்று பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கின. வகுப்புகளுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்