மாணவர்களின் அறிவியல் கண்காட்சி

நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது.

Update: 2023-09-14 20:25 GMT

நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்துக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் லேப்" பயிற்சி நடைபெற்றது. இதையொட்டி மாணவர்கள் தங்களது படைப்பாற்றல் மாதிரிகளை கண்காட்சிகளாக வைத்திருந்தனர். கண்காட்சிக்கு பள்ளி செயலர் செல்லையா வரவேற்று மாணவர்களை பாராட்டினார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஏ.எல்.எஸ்.சண்முகம் மற்றும் தளவாய் திருமலையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் 50-க்கும் மேற்பட்ட மாதிரிகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். மாவட்ட கல்வி அதிகாரி தயாபதி நளதம் கண்காட்சியை பார்வையிட்டு மாணவ -மாணவிகளுடன் கலந்துரையாடினார். கண்காட்சியை மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் பார்வையிட்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் உலகநாதன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சொக்கலிங்கம் மற்றும் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்