திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் பள்ளி மாணவர் 3-ம் இடம்
திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் பள்ளி மாணவர் 3-ம் இடம்
திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் எஸ்.ஜீவானந்தம். இவர் அரியலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் 3-ம் இடம் பெற்று திருவாரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவர் ஜீவானந்தத்தை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பாராட்டி பரிசு வழங்கினார். வெற்றி பெற்ற மாணவரை திருவாரூர் கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் சந்திரா முருகப்பன், நிர்வாக அறங்காவலர் முருகப்பன், செயலாளர் இன்பராஜ், முதல்வர் மலர்விழி இன்பராஜ், நிர்வாக மேலாளர் சின்னராஜ், பயிற்றுனர் விக்னேஷ், உடற்கல்வி ஆசிரியர் தாயுமானவன் உள்ளிட்டோர் பாராட்டினார்.