மர்ம வாகனம் மோதி மாணவன் பலி

மர்ம வாகனம் மோதி மாணவன் பலியானார்.

Update: 2022-12-27 19:21 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஒருவன் மோட்டார் சைக்கிளில் சென்று ெகாண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை ரோட்டில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் அந்த மாணவன் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. உடனே அந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்தான். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்