மர்ம பொருள் வெடித்து பிளஸ் 2 மாணவன் பலி
வீட்டில் இருந்த மர்ம பொருள் வெடித்து மாணவன் ஆதித்ய பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.;
சென்னை,
சென்னை கொளத்தூரை சேர்ந்த மாணவன் வீட்டில் இருந்த மர்ம பொருள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பிளஸ் 2 படித்து வந்த மாணவன் ஆதித்ய பிரணவ் அறிவியலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். எந்த நேரமும் அறிவியல் சார்ந்த சோதனைகளை வீட்டில் செய்து வருவது வழக்கம்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட ஆராய்ச்சியின்போது வீட்டில் இருந்து கரும்புகை வருவதாக கண்ட அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக அவரது தந்தைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
.இந்நிலையில், இன்று மதியம் திடீரென மாணவனின் வீட்டில் இருந்து சத்தம் வரவே அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது மாணவன் சடலமாக கிடந்துள்ளார். இதுதொடர்பான விசாரணையில், வீட்டில் இருந்த மர்ம பொருள் வெடித்து மாணவன் ஆதித்ய பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.