சேலத்தில் கல்லூரி பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கிய மாணவர் பலி
சேலத்தில் கல்லூரி பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கிய மாணவர் பலியானார்.;
கன்னங்குறிச்சி,
சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமதுரபீக், இவருடைய மகன் அப்துல்கலாம் (வயது 20). இவர் சேலம் சின்னதிருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். நேற்று கல்லூரி முடிந்து அவர் கல்லூரி பஸ்சில் ஏறி உள்ளார். அப்போது பஸ் கல்லூரிைய விட்டு வெளியே வந்த சில மீட்டர் தூரத்தில் உள்ள வளைவில் சென்றபோது பஸ்சில் இருந்து அப்துல்கலாம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.