மின்சாரம் தாக்கி மாணவன் படுகாயம்

விக்கிரவாண்டி அருகே மின்சாரம் தாக்கி மாணவன் படுகாயம் ரெயில்பெட்டி மீது ஏறி விளையாடியபோது விபரீதம்

Update: 2022-12-05 18:45 GMT

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் லட்சுமி நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் கோகுல்(வயது 15). முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் இவன் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் முண்டியம்பாக்கம் ரெயில்வே யார்டுக்கு சென்றான். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியின் மீது ஏறி விளையாடியபோது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் இருந்த மின்சாரம் அவனை தாக்கியது. இதில் பலத்த தீக்காயத்துடன் தூக்கி வீசப்பட்ட கோகுலை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து திண்டிவனம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்