பஸ் படிக்கட்டுக்கு அடியில் கால் சிக்கியதில் மாணவர் படுகாயம்

பஸ் படிக்கட்டுக்கு அடியில் கால் சிக்கியதில் மாணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-02-16 19:15 GMT

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள ஆதினங்குடி அவுரி மேட்டு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மகன் பிரவீன்குமார் (வயது 18). இவர் நாகையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் பஸ்சில் கல்லூரிக்கு சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று கொண்டு பயணித்தார். திருமருகல் பஸ் நிறுத்தம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக பிரவீன்குமாரின் கால், பஸ் படிக்கட்டுக்கும், சாலைக்கும் இடையே சிக்கி கொண்டது. இதனால் அருகில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டதால் பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது. படிக்கட்டுக்கு அடியில் சிக்கியதில் பிரவீன்குமாரின் கால் விரல்களில் எலும்பு நொறுங்கி அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்