மாணவ-மாணவிகளின் ஆரோக்கிய நடைபயணம்

திண்டுக்கல்லில் சிறுதானிய உணவுகள் குறித்து மாணவ-மாணவிகளின் ஆரோக்கிய விழிப்புணர்வு நடைபயணத்தை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-26 19:45 GMT

பொதுமக்களிடம், சிறுதானிய உணவு வகைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆரோக்கிய நடைபயண நிகழ்ச்சி திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கம்பு, வரகு உள்ளிட்ட சிறுதானிய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும், என்றார்.

இதைத்தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஆரோக்கிய நடைபயணத்தை, கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஆரோக்கிய நடைபயணம் தலைமை தபால் அலுவலகம், பஸ்நிலையம் உள்பட பல்வேறு பகுதிகள் வழியாக சென்று மீண்டும் முகாம் அலுவலகத்தை வந்தடைந்தது. இந்த நடைபயணத்தில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் சிறுதானிய உணவு வகைகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், சட்டநாதன், மோகனரங்கம், லாரன்ஸ், செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்