புதுச்சத்திரம் அருகே நீரில் மூழ்கி மாணவி பலி
புதுச்சத்திரம் அருகே நீரில் மூழ்கி மாணவி உயிரிழந்தாள்.;
சிதம்பரம்,
புதுச்சத்திரம் அருகே உள்ள கீழ்பூவாணிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் அஞ்சலி (வயது 12). இவள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று மாணவி, அதே பகுதியில் உள்ள பெருமாள் ஏரி வடிகால் வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றாள். அப்போது அவள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தாள். இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.