கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு
கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவன் இறந்தான்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வேப்பங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் சுந்தர்ராஜன் (வயது13). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று சுந்தர்ராஜன் நடந்து சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி சுந்தர்ராஜன் பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.