ஏரியில் மூழ்கி மாணவன் பலி

ஏரியில் மூழ்கி மாணவன் பலியனான்.

Update: 2023-05-05 17:49 GMT

குடியாத்தம்

ஏரியில் மூழ்கி மாணவன் பலியனான்.

கர்நாடக மாநிலம் பத்ராவதியை அடுத்த காளங்கட்டை பகுதியை சேர்ந்தவர் தயாளன். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 2 மகள்களும், பிரேம் (வயது 11) என்ற மகனும் உண்டு. பிரேம் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

ரேகாவின், பெற்றோர் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அம்மணாகுப்பம் கலைஞர் நகரில் வசித்து வருகின்றனர்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் சிறுவன் பிரேம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள தாத்தா மூர்த்தி வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த பிரேமை காணவில்லை. இதனால் அதிர்ச்சி மூர்த்தி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சிறுவன் பிரேமை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் சந்தேகத்தின் பேரில் மூர்த்தி அந்த பகுதியில் உள்ள ஏரியில் இறங்கி தேடிய போது பிரேமை பிணமாக மீட்டார்.

தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

----

Reporter : T.N. KESAVALU Location : Vellore - VELLORE SUB-URBAN - GUDIYATHAM

Tags:    

மேலும் செய்திகள்